Jul 1, 2025 - 04:07 PM -
0
NDB லீசிங்ஆனது , இலங்கையர்கள் புத்தம் புதிய பெரோடுவா ஆக்சியா G[ Perodua Axia G-]ஐ கொள்வனவு செய்வதை முன்னெப்போதையும் விட இலகுவாக்குகிறது. இதற்கிணங்க நியாயமான விலையில் வாகன உரிமையை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு லீசிங் சலுகையுடன். இலங்கையில் PeroduaAxia G-யின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரும் யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா PLC-யிற்கு முழுமையாக உரித்துடைமையானதும் அதன் துணை நிறுவனமுமான Unimo Enterprises Ltd உடனான இந்த பிரத்தியேக பங்குடைமையின் மூலம், குறிப்பிட்ட காலத்திற்கு, வாடிக்கையாளர்கள் ரூ. 69,999/- நிர்வகிக்கக்கூடிய மாதாந்த தவணைகளில் செலுத்துவதன் மூலம் வாகனத்தை செலுத்த முடியும், இதனால் இந்த சிறிய மற்றும் நம்பகமான வாகனம் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்ற தெரிவாக அமைகிறது.
இந்த சிறப்பு சலுகையானது, பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்வி வழங்குநர்கள் முதல் பொதுத்துறை ஊழியர்கள், தனியார் துறை வல்லுநர்கள் மற்றும் சிறு வர்த்தக உரிமையாளர்கள் வரை நாட்டை நகர்த்திச் செல்லும் பல்வேறு வகையான தனிநபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. NDB லீசிங் அவர்களின் அர்ப்பணிப்பைப் புரிந்துகொண்டு, நடைமுறை ரீதியிலானதும் மற்றும் செலவு குறைந்ததுமான ஒரு தீர்வின் மூலம் அவர்களின் போக்குவரத்துத் தேவைகளை ஆதரிப்பதில் பெருமை கொள்கிறது.
பெரோடுவா ஆக்சியா G இன் எரிபொருள் செயல்திறன், பயன்பாட்டின் இலகு தன்மை மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு ஆகியவற்றிற்கான நற்பெயர், தனிப்பட்ட அல்லது தொழில்முறை பயன்பாட்டிற்கான ஒரு சிறந்த தெரிவாக அமைகிறது. மேலும் NDB இன் விரைவான ஒப்புதல்கள், நெகிழ்வான கட்டணத் திட்டங்கள் மற்றும் நேரடியான ஆவணப்படுத்தல் செயல்முறை மூலம், நம்பகமான இறக்குமதி மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் விண்ணப்பித்தது தொடக்கம் விநியோகம் வரை ஒரு சுமூகமான பயணத்தை அனுபவிக்க முடிவதுடன் மேலும் ஒருநாளில் வாகனத்தை வீட்டிற்கு ஓட்டிச் செல்லவும் முடியும்.
இலங்கையர்கள் தமது இலக்குகளை அடைய உதவுவதில் NDB லீசிங்கின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு இந்த முயற்சியானது மற்றொரு எடுத்துக்காட்டாகும். நீங்கள் உங்கள் வாகனத்தை மேம்படுத்தினாலும் அல்லது உங்கள் வாழ்வாதாரத்தில் முதலீடு செய்தாலும், நம்பகமான நிதியியல் வழிகாட்டுதல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட லீசிங் தெரிவுகளுடன் உங்கள் பயணத்தை ஆதரிக்க NDB தயாராக உள்ளது. இது தொடர்பான தகவல்களை மேலும் அறிய அல்லது விண்ணப்பிக்க, உங்கள் அருகிலுள்ள NDB கிளைக்குச் செல்லவும். அல்லது https://www.ndbbank.com/leasing ஐப் பார்வையிடவும்.

