செய்திகள்
போலி டொலர்களுடன் ஒருவர் கைது

Jul 2, 2025 - 08:23 AM -

0

போலி டொலர்களுடன் ஒருவர் கைது

ஆறு போலி டொலர் நாணயத்தாள்களுடன் மினுவாங்கொடை பொலிஸாரால் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (01) பிற்பகல் மினுவாங்கொடை நகரில் உள்ள ஒரு வங்கியில் சோதனை நடத்தப்பட்டது. 

இதன்போது 06 போலி டொலர் நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டார். 

சந்தேகநபர் ரஸ்நாயக்கபுர பகுதியை சேர்ந்த 45 வயதானவர் என தெரியவந்துள்ளதுடன், மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05