Jul 2, 2025 - 11:39 AM -
0
இன்று (02) காலை நோர்வூட் பிரதேசபையின் செயலாளர் முரளிதரன் முன்னிலையில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிரான்சிஸ் ஹெலன் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நாடராஜ் சிவகுமார் ஆகியோர் கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நோர்வூட் தொகுதி அமைப்பாளர் லலித் சுரவீர, உயர்பீட உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளரும், அம்பகமுவ பிரதேசசபை தலைவருமான கபில நாகந்தல், தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் ஜி.நகுலேஸ்வரன் உட்பட ஆதரவாளர்கள் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
--