Jul 2, 2025 - 02:50 PM -
0
பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவதில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு மாறாக செயல்பட்டதற்காக சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் சத்துன் இரங்கிக்கவின் கட்சி உறுப்புரிமை உடனடியாக இடைநிறுத்துவதற்கு சர்வஜன அதிகாரம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வஜன அதிகாரத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட கடிதத்தில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரபட்சமற்ற ஒழுக்காற்று விசாரணையைத் தொடர்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அவரின் கட்சி உறுப்புரிமை உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

