Header Logo

வடக்கு
மன்னார் மருதமடு அன்னையின் ஆடித் திருவிழா

Jul 2, 2025 - 04:30 PM -

0

மன்னார் மருதமடு அன்னையின் ஆடித் திருவிழா

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (02) மிகச் சிறப்பாக லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது.

இன்று காலை 6.15 மணி அளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில், மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, குருநாகல் மறைமாவட்ட ஆயர்  அந்தோணி பெரேரா ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார் ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பாவனையும் அதனை தொடர்ந்து மடு அன்னையின் ஆசீர்வாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

திருவிழா திருப்பலியில் அருட் தந்தையர்கள் அருட் சகோதரர்கள் திணைக்கள தலைவர்கள் உள்ளடங்கலாக லட்சக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த ஜூன் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்தை தொடர்ந்து நவநாள் ஆராதனை திருப்பலிகள் இடம்பெற்று நேற்று (01) மாலை வேஸ்பர்ஸ் ஆராதனை இடம்பெற்ற நிலையில் இன்று திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

--

MOST READ

காணொளி
படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

title