வடக்கு
செம்மணியில் அடையாளம் காணப்பட்ட 38 எலும்பு தொகுதிகள்

Jul 2, 2025 - 06:49 PM -

0

செம்மணியில் அடையாளம் காணப்பட்ட 38 எலும்பு தொகுதிகள்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வின்போது இன்று (02) மொத்தமாக 38 எலும்பு தொகுதிகள் அடையாளம்  காணப்பட்டுள்ளன.

 

இதில் 34 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன மேலும் 04 என்புத் தொகுதிகள் இன்றைய தினம் மாத்திரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

 

மேலும் 04 என்பு தொகுதிகள் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராஜா தலைமையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

 

குறித்த அகழ்வு பணியில் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

 

இதற்கு அருகில் உள்ள இன்னொரு புதிய இடத்திலும் மனித என்புத் தொகுதிகள் இருக்கலாம் என்ற நிலையில் குறித்த பிரதேசமும் அகழ்வாராய்ச்சியாளர்களால் இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05