Jul 2, 2025 - 07:20 PM -
0
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு கோயில்வாடி மீன்பிடித் துறைமுகத்திற்கு செல்லும் பாலத்தின் வழியாக மினி லாரி ஒன்று தண்ணீர், மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் சென்றபோது, பாலம் இடிந்து வீழ்ந்ததால் லாரி கடலுக்குள் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் இருவர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் இன்று (02) காலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடலுக்கு நடுவே அமைந்த இந்த பாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளதால், புதிய பாலம் அமைக்க வேண்டுமென மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இன்று காலை, வழக்கம்போல் மீனவர்கள் மீன்பிடிக்கத் தயாராக, ஐஸ், மீன்பிடி வலை, உணவு, குடிநீர் உள்ளிட்ட பொருட்களை லாரியில் ஏற்றிச் சென்றபோது, பாலம் பாரத்தைத் தாங்காமல் உடைந்து, லாரி கடலுக்குள் விழுந்தது.
இதில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் படுகாயமடைந்தபோதும், தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.மீனவர்களும் பொலிஸாரும் இணைந்து காயமடைந்தவர்களையும் லாரியையும் மீட்டனர். இதனால், மீன்பிடி படகுகளுக்கு தேவையான உபகரணங்களைக் கொண்டு செல்ல முடியாமல் மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
--