Header Logo

செய்திகள்
இன்றும் மழையுடனான வானிலை

Jul 3, 2025 - 06:14 AM -

0

இன்றும் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மேலும், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.  

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

title