Jul 3, 2025 - 08:44 AM -
0
உள்நாட்டின் முன்னணி பாதணி உற்பத்தியாளர்களான லக்பாபுட்வெயார் (பிரைவேட்) லிமிடெட், [Lakpa Footwear (Pvt) Ltd] அண்மையில் ஏற்பட்ட சட்டப்பிரச்சினையைத் தொடர்ந்து அதன் பிரபலமான குழந்தைகளுக்கான ‘Fun Shoe’ வர்த்தக நாமம் கொண்ட உற்பத்திகளை தற்காலிகமாக கிடைக்காததற்கு அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனை பங்குதாரர்களிடம் மன்னிப்பினை கோரியுள்ளது. இடையூறு காரணமாக சிரமங்கள் ஏற்பட்டதை நிறுவனம் ஏற்றுக்கொண்டதுடன் மற்றும் இந்த காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது பொறுமையை கடைப்பிடித்தமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
இதன் காரணமாக குடும்பங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் விநியோகத்திற்கு காத்திருந்து ஏமாற்றம் அடைந்ததை நாம் உணர்கிறோம், என்று லக்பாபுட்வெயாரின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான மலித்த கன்னங்கர தெரிவித்தார். நாம் சட்ட செயல்முறையின் மூலம் செயல்பட்டுவருவதுடன், மேலும் இந்த விடயத்தை முடிந்த வரை விரைவாக தீர்ப்பதற்கு உறுதி பூண்டுள்ளோம். எமது வடிவமைப்புகளின் தனித்தன்மை மற்றும் எமது குழுவின் புத்தாக்கம் ஆகியவை தொடர்பாக நாம்பெருமை கொள்கிறோம். ‘Fun Shoe’ தயாரிப்பானது எமது அனைத்து தயாரிப்புகளுக்கும் நாம் பயன்படுத்தும் புதுமைமற்றும் கவனிப்பின் தரங்களை பிரதிப்பலிப்பதாக உள்ளது.
லக்பாபுட்வெயார் நிறுவனமானது அதன் ‘Fun Shoe’ உற்பத்தியானது நிறுவனத்தின் சொந்த வடிவமைப்பு செயல் முறை மூலம் உருவாக்கப்பட்டது என்றும், புதுமை மற்றும் தனி கைவினைத் திறனுக்கான அதன் நீண்டகால அர்ப்பணிப்புக்கு ஏற்ப உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் நிறுவனமானது அதன் அனைத்து பிரபலமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதணிகளையும் தொடர்ந்து வழங்குவதாக உறுதிப்படுத்தியது. லக்பாபுட்வெயார் அதன் flip-flops பாதணி வகைகளை ஐரோப்பியா, ஆசியா, ஓசினியா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் அமைந்துள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
உள்நாட்டு தேவையைப் பொறுத்து, லக்பாவின் ஏற்றுமதிகள் நாட்டிற்கு மிகவும் தேவையான அந்நியச் செலாவணியைக் கொண்டு வரும் அதேவேளையில், பிராந்திய தரநிலைகளுக்கு அப்பாற்பட்ட வடிவமைப்பு மற்றும் நிர்மாணத்தரம் கொண்ட புதுமையான பாதணிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நிறுவனம் இலங்கையில் தனது இருப்பை மேலும் விரிவுபடுத்துகிறது.
1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, இலங்கையின் இறப்பர் செய்கையுடைய பிராந்தியத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள லக்பாபுட்வெயார், நாட்டின் இரண்டாவது பாரிய பாதணி உற்பத்தியாளராக திகழ்கிறது. அதன் நிலையான நடைமுறைகள், புதுமையான வடிவமைப்புகள் மற்றும் 100% மீள்சுழற்சி செய்யக்கூடிய உற்பத்திகளுக்கு பெயர் பெற்ற லக்பா நிறுவனமானது, 4,000 விநியோகஸ்தர்கள் மற்றும் பல ஏற்றுமதி இடங்களின் வலையமைப்பு ஊடாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு தனது உற்பத்திகளை வழங்கிவருகிறது.