Jul 3, 2025 - 11:16 AM -
0
தமிழ் பண்பாடு அனைத்து உலக மாநாடு 2025 இவ் வருடத்திற்கான மாநாடானது இன்று (03) காலை 10 மணிக்கு நுவரெலியாவில் உள்ள தியாகிகள் திடலில் தியாகிகளின் ஸ்தூபிக்கு மாலை அணிவித்து அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தியதுடன் ஆரம்பமானது.
இந்நிகழ்வானது தமிழ்நாடு திருநெறிய தமிழ் சைவ சமய பாதுகாப்பு பேரவையின் தலைவர் கே. சசிகுமார் வழிகாட்டுதலின் கீழ் நுவரெலியா மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ராஜாராம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக நுவரெலியா இந்து கலாச்சார பேரவையின் ஒத்துழைப்போடு நுவரெலியா பிரதேச செயலக அதிசய மண்டபத்தில் சர்வதேச நடைபெற்றது.
இந்நிகழ்வில் சர்வதேச ரீதியில் இருந்து பங்கு பற்றிய இந்திய வம்சாவளி மக்களுக்கான அமைப்பு, உலக செம்மொழி தமிழ் சங்கம், லண்டன் தமிழ் கல்வியகம், தமிழ்நாடு திருநெறிய தமிழ் சைவ சமய பாதுகாப்பு பேரவையின் பங்குப்பற்றளுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இந்திய துணை தூதுவர் கண்டி காரியாலயம் வி. எஸ் சரண்யா அம்மையார் ஐ எஃப் எஸ் மற்றும் முன்னாள் இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜன் ஐ எஃப் எஸ் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்தோடு இந்நிகழ்வில் முனைவர்கள் பேராசிரியர்கள் ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவ மாணவிகள் என தமிழுக்கு பெருமை சேர்க்கக்கூடிய தமிழ் புலவர்கள் கவிஞர்கள் பங்கு பற்றவுடன் சிறப்பான முறையில் நடைபெற்றது.
அத்தோடு இந்நிகழ்வில் பங்கு பற்றிய சிறப்பு விருந்தினர்கள், புலவர்கள், முனைவர்கள், பேராசிரியர்கள், அத்தோடு தமிழுக்கு பெருமை சேர்க்க கூடியவர்கள், மலையகத்திற்கு பெருமை சேர்க்க கூடியவர்கள், என அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
--