விளையாட்டு
கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Jul 3, 2025 - 03:03 PM -

0

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் புதிய பரிமாணத்தில்  'உலக கிளப் சாம்பியன்ஷிப் தொடர்' 2026 இல் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்தியாவின் ஐபிஎல் தொடர், பாகிஸ்தானின் பிஎஸ்எல், அவுஸ்திரேலியாவின் BBL, தென்னாப்பிரிக்காவின் SA20, இங்கிலாந்தின் THE HUNDRED போன்ற உலகெங்கிலும் உள்ள ஃபிரான்சைஸ் தொடர்களில் கிண்ணங்களை வென்ற அணிகளை ஒருங்கிணைத்து பிரமாண்ட தொடராக நடத்தப்படவுள்ளது.

 

அத்தொடரை உலக கிளப் சாம்பியன்ஷிப் என்ற பெயரில் மீண்டும் துவங்குவதற்கு முயற்சிகள் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ரசிகர்களின் போதிய ஆதரவின்மை மற்றும் ஸ்பான்சர்ஷிப் பிரச்சனைகள் காரணமாக 2015 ஆம் ஆண்டு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 

2009 - 2014 வரை நடைபெற்ற அந்தத் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 2 கிண்ணங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05