வணிகம்
தொழில்துறையின் அதிகரித்துவரும் தேவைகளுக்கு ஏற்ற வகையில் பல்வேறு துறைகளில் முதுமானித் திட்டங்களை விஸ்தரிக்கும் SLIIT

Jul 3, 2025 - 04:54 PM -

0

தொழில்துறையின் அதிகரித்துவரும் தேவைகளுக்கு ஏற்ற வகையில் பல்வேறு துறைகளில் முதுமானித் திட்டங்களை விஸ்தரிக்கும் SLIIT

இலங்கையில் அரசசார்பற்ற முன்னணி உயர் கல்வி வழங்குனராக அங்கீகரிக்கப்பட்டுள்ள SLIIT நிறுவனம், தொழில்துறையில் அதிகரித்துவரும் தேவைகள், ஆய்வுளின் முன்னேற்றங்கள் மற்றும் சர்வதேச கல்விக் கட்டமைப்புக்களுக்கான விரிவான முதுமானித் திட்டங்களின் ஊடாக மாணவர்களை வலுப்படுத்தி வருகின்றது. 

 கணினி, வணிகம், பொறியியல், கட்டடவடிவமைப்பு, கல்வி அல்லது புத்தாக்கமான புதிய செயற்கை நுண்ணறிவில் விஞ்ஞான முதுமானி திட்டத்தைக் கற்பவர்களாக இருந்தாலும், நுட்பமாக தொகுக்கப்பட்ட கல்விச் சிறப்புத் தன்மை, நடைமுறையான நிபுணத்துவம் மற்றும் தொழில்துறையுடனான மதிப்பு மிக்க தொடர்பு ஆகியவற்றின் ஒத்துப்பின் பயன்களை SLIIT இல் மாணவர்கள் அனுபவிக்க முடியும். 

கல்வியியல் முதுமானி, கல்வியியலில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா, வணிக முகாமைத்துவ முதுமானி, விஞ்ஞான முதுமானி மற்றும் PhD போன்ற பரந்த துறைகளிலிருந்து மாணவர்கள் தெரிவுசெய்ய முடியும். இந்தப் பாடநெறிகள் முழுநேரம், பகுதி நேரம் என விரும்பியவாறு பயிலக்கூடிய நெகிழ்வுப் போக்கைக் கொண்டமைந்துள்ளன. ஆய்வு அடிப்படையிலான கற்றல், புதுமையாக்கல் மற்றும் நிஜஉலகத்தின் நடைமுறையிலான பயன்பாடு என்பவற்றை வலியுறுத்தி, பட்டதாரிகளுக்குத் தேவையான தொழில்சார் திறன்கள், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்கான கற்றல் போன்றவற்றை SLIIT வழங்குகின்றது. 

நவீன ஆய்வுகூடங்கள், விரிவாக்கப்பட்ட நூலகம் மற்றும் பொதுவான கற்றல் பகுதி, அதிநவீன நிகழ்நிலை கற்றல் வழங்கல் போன்றவற்றுக்கான அணுகலைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வழங்குகின்றது. தொழில்துறை நுண்ணறிவையும் நவீன ஆய்வின் நிபுணத்துவத்தையும் சிறப்பாக ஒன்றிணைத்துப் பயன்படுத்துவதன் மூலம் மாணவர்கள் தங்களது துறைகளில் முன்னேற்றம் பெறுவது சர்வதேச அனுபவம் பெற்ற உயர் தகுதியுடைய SLIIT விரிவுரையாளர் குழுவின் ஊடாக உறுதிசெய்யப்படுகின்றது. 

கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் திகழும் SLIIT நிறுவனம், இயந்திரங்களின் அடிப்படையிலான கற்றல், ஆழமான கற்றல், செயற்கை நுண்ணறிவை உருவாக்குதல் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பொறுப்புவாய்ந்த முறையில் பயன்படுத்தல் போன்றவற்றில் நிபுணத்துவத்தை ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவு விஞ்ஞான முதுமானித் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்தப் பாடநெறியானது விமர்சன சிந்தனை மற்றும் நெறிமுறை தொடர்பான விழிப்புணர்வை வளர்க்கும் அதேநேரம், வேலைவாய்ப்புக்களில் செயற்கை நுண்ணறிவுக்குக் காணப்படும் அதிகரித்த கேள்விக்கு ஏற்ற வகையில் கடுமையான கல்விசார் விடயங்கள் மற்றும் நடைமுறை ரீதியான பயன்பாடு என்பவற்றைக் கலவையாகக் கொண்டதாக அமைந்துள்ளது. 

SLIIT நிறுவனத்தின் சிறப்புமிக்க தரம் உலகளாவிய ரீதியில் அதிகரித்துவரும் அதன் அங்கீகாரங்களினால் மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றன. அங்கீகாரங்கள் உஅங்கீகாரங்கள் மேலும் உறுதி செய்கின்றன. பல்தரப்பட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தில் இலங்கையில் உள்ள முதல்தர அரசசார்பற்ற பல்கலைக்கழகமாக SLIIT இடம்பிடித்துள்ளது. 

டைம்ஸ் உயர்கல்வி பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025ற்கு அமைய நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களில் இது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. AD Scientific சுட்டிக்கு அமைய உலகின் இளமையான பல்கலைக்கழகத் தரப்படுத்தல்2025ல் இது உயர்ந்த இடத்தையும் பிடித்திருப்பதுடன், SCImago நிறுவனத் தரப்படுத்தல் 2024இல் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும், டைம்ஸ் உயர்கல்வி பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025 இல், கணினி விஞ்ஞானத் துறையில் 1001+ வரிசை பிரிவில் இடம்பிடித்ததுடன், இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மிஞ்சி இத்துறையில் 2வது இடத்தைப் பெற்றுள்ளது. 

இந்த மதிப்புமிக்க தரவரிசைப்படுத்தல்கள், கணினி விஞ்ஞானத் துறையில் SLIIT நிறுவனத்தின் உலகளாவிய வளர்ச்சி மற்றும் அதன் நிலையான கல்விசார் மற்றும் ஆய்வுக்கான சிறப்பை வெளிப்படுத்துகின்றன. அத்துடன், SLIIT விரிவுரையாளர் குழுவின் அர்ப்பணிப்பு, அதன் பாடநெறிகளின் மதிப்பு மற்றும் பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் சாதனைகளை உறுதிப்படுத்தும் சான்றாகவும் அமைகின்றன. 

ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் இடம்பெறுகின்ற மாணவர் சேர்க்கைகளின் போது, தொழில்முனைவுக்கான முன்னேற்றத்தை எதிர்பார்க்கும் நிபுணர்கள், நுண்ணறிவை மேம்படுத்த விரும்பும் விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள், வேலைவாய்ப்பு சந்தையில் போட்டியுடைமை பெற்றிருக்க விரும்பும் பட்டதாரிகள் ஆகியோர் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு SLIIT அழைக்கின்றது. உயர்கல்விப் பாடநெறிகள் தொடர்பான மேலதிகப் பெற்றுக்கொள்ள info@sliit.lk என்ற மின்னஞ்சல் முகவரியில், +94 11 754 4801 என்ற தொலைபேசி இலக்கத்தில், அல்லது www.sliit.lk இணையதளத்தில் தொடர்புகொள்ளலாம்.

Comments
0

MOST READ
01
02
03
04
05