Jul 3, 2025 - 05:18 PM -
0
குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த வத்தேகம டிப்போவைச் சேர்ந்த பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து அரலிய உயன பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பஸ் வீதியை விட்டு விலகி ஒரு வீட்டின் அருகே கவிழ்ந்தது விபத்துக்குள்ளானதில், குறித்த பஸ்ஸில் பயணித்த சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 8 பேர் சிகிச்சைக்காக வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் சென்று கொண்டிருந்தபோது, சாரதியின் இருக்கைக்கு அருகிலுள்ள கதவு திடீரெனத் திறந்ததாகவும், சாரதி அதைப் பிடிக்கச் சென்றபோது, பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
விபத்து நடந்த போது பஸ்ஸில் சுமார் 25 பயணிகள் இருந்ததாகவும், காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கூட கவலைக்கிடமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் குறித்த வீடு சேதமடைந்துள்ளது.