சினிமா
போட்டியாளர் தலையில் ஏற்பட்ட விபரீதம்

Jul 3, 2025 - 06:17 PM -

0

போட்டியாளர் தலையில் ஏற்பட்ட விபரீதம்

ஜீ தமிழில் ஒளிப்பரபாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மணிமேகலை மற்றும் மிர்ச்சி விஜய் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

 

விஜய் டிவியில் இருந்து வெளியேறி ஜீ தமிழிக்கு சென்ற மணிமேகலைக்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய ஆதரவை கொடுத்து வருகிறது.

 

இந்த வாரம் முதல் அரையிறுதி சுற்று ரவுண்ட் நடந்துள்ளது. போட்டியாளர்கள் தங்கள் விறுவிறுப்பான ஆட்டத்தை ஆடி அனைவரையும் ஈர்த்துள்ளனர்.

 

இந்நிலையில், போட்டியாளர்கள் நிதின் - தித்யா ஜோடி ஆடியபோது எதிர்ப்பாராத விதமான நிதின் மேல் அடிக்கப்பட்ட கண்ணாடி கிளாஸ், அவரின் தலையை கிழுத்துள்ளது.

 

தலையில் அடிப்பட்டு ரத்தம் வருவதை பார்த்த நடுவர்கள் சினேகா, வரலட்சுமி, நமிதா ஷாக்காகியுள்ளனர். ஆட்டம் ஆட ஏன் இதெல்லாம் செய்ய வேண்டும் என்று வீடியோவை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05