Jul 3, 2025 - 11:09 PM -
0
இன்று (03) இரவு, ராகம, படுவத்தை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் வந்த இரு துப்பாக்கிதாரிகள், பிஸ்டல் வகை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுவத்தை கிராம அபிவிருத்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் நெருங்கிய கூட்டாளியான ‘ஆர்மி உபுல்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் துப்பாக்கிதாரிகளின் அடையாளம் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.