வடக்கு
கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா!

Jul 4, 2025 - 10:03 AM -

0

கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா!

 

நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா நேற்று (03) வியாழக்கிழமை மாலை மாலை 6 மணி அளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 

நானாட்டான் பங்கிற்கு உட்பட்ட 8 துணை ஆலயங்களுக்கான கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டது. 

முத்தரிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை தேவராஜா கொடுதோர் தலைமையில் நேற்று கொடியேற்றத்துடன் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. 

தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் இடம் பெற்று எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.

 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05