Jul 5, 2025 - 02:09 PM -
0
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (5) பகலிரவு போட்டியாக இடம்பெறுகிறது.
அதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை அணியில் இரு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைய எஷான் மாலிங்கவுக்கு பதிலாக துஷ்மந்த சமீரவும், மிலான் ரத்நாயக்கவுக்கு பதிலாக துனித் வெல்லாலகேவும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

