Jul 6, 2025 - 11:06 AM -
0
கடந்த சில நாட்களாக முதல் மத்திய மலைநாட்டின் பெய்து வரும் கனமழை மற்றும் காற்று காரணமாக, மரங்கள் விழுவது அதிகரித்துள்ளது.
அதன்படி இன்று (06) ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் காலை 7.00 மணியளவில் நோர்வூட் ஓல்டன் பகுதியில் உள்ள பிரதான வீதியில் பாரிய மரமொன்று விழுந்துள்ளது.
வீழ்ச்சியடைந்த மரத்தைச் சுற்றியுள்ள தோட்டத் தொழிலாளர்கள் நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் நோர்வூட் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றிய பின் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதியில் முறிந்து விழும் நிலையில் அதிக மரங்களில் அபாயகரமானதாக காணப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
--