கிழக்கு
ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

Jul 6, 2025 - 12:56 PM -

0

ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திய சந்தேக நபரை காரைதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட வெட்டு வாய்க்கால் பகுதியில் இச்சம்பவம் நேற்று (05) இரவு  இடம்பெற்றுள்ளது.

 

காரைதீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீதி தடை ஏற்படுத்தி சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அப்பகுதியால் சந்தேகத்திற்கிடமாக வருகை தந்துள்ளார்.

 

இதன் போது குறித்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த பொலிஸார் அந்த நபரை சோதனை இட்ட போது 15 கிராம் ஹெரோயின் போதைப் பொருள், 15 கிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டது.

அத்துடன் குறித்த போதைப்பொருட்களை கடத்தி வந்தவர் 25 வயதுடைய ஏறாவூர் 06 பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்  என்பது ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

 

இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக காரைதீவு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

 

அத்துடன்  குறித்த சோதனை நடவடிக்கையானது அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வழிகாட்டுதலில் காரைதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

குறித்த சந்தேக நபரை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காரைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05