செய்திகள்
கம்பஹாவில் 12 மணிநேர நீர்வெட்டு

Jul 7, 2025 - 06:47 AM -

0

கம்பஹாவில் 12 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று (07) 12 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.  

இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த உப மின் நிலையத்தால் விநியோகிக்கப்படும் குழாய்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.  

அதன்படி, இன்று (07) காலை 8:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலான காலப்பகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக அந்த சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. 

நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் பிரதேசங்கள்,  

பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க / சீதுவை நகர சபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டுநாயக்க, மினுவாங்கொடை பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட ஒரு பகுதி.

Comments
0

MOST READ
01
02
03
04
05