வணிகம்
MSME அபிவிருத்தியில் சிறந்து விளங்குவதைக் கொண்டாட NDB வங்கி CMA ஸ்ரீ லங்காவுடன் இணைந்தது

Jul 7, 2025 - 11:13 AM -

0

MSME அபிவிருத்தியில் சிறந்து விளங்குவதைக் கொண்டாட NDB வங்கி CMA ஸ்ரீ லங்காவுடன் இணைந்தது

NDB வங்கியானது ஐக்கிய நாடுகள் சபையின் MSME தினம் 2025 ஐ நினைவுகூரும் வகையில், இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனம் (CMA Sri Lanka) நடத்திய MSME வர்த்தக அபிவிருத்தி உச்சி மாநாடு மற்றும்வர்த்தக சிறப்பு விருதுகள் நிகழ்வில் பெருமையுடன் பங்கேற்றது. கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கையில் உள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) பங்களிப்பை கௌரவித்து மேம்படுத்துவதற்காக தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர் ஒன்றிணைந்தனர். 

விருது பெற்றவர்களில் NDB இன் கொட்டாவ கிளையின் மதிப்புமிக்க வாடிக்கையாளரான சோபாகோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனமும் ஒன்றாகும். வங்கியின் சொந்த பரிந்துரையின் கீழ் வர்த்தக சிறப்புக்கான சிறந்த 10 நிறுவனங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த அங்கீகாரமானது வாடிக்கையாளரின் தொழில்முனைவோர் வலிமையை பிரதிபலிப்பதுடன் மட்டுமல்லாமல், அதன் துறையில் SME சிறப்பை அடையாளம் காண்பது, விருத்தி அடையச் செய்வது மற்றும் கொண்டாடுவதில் NDB இன் முன்னோடிப் பங்கையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. 

இந்த தேசிய தளத்தில் NDB வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், வலயத் தலைவர்/வர்த்தக வங்கியியல் தலைவர் நீலேந்திர விதானகே, உச்சிமாநாட்டின் தொழில்நுட்ப அமர்வு 2 இன் போது உயர் மட்ட குழு கலந்துரையாடலில் பங்கேற்றார். SME நிதி மற்றும் வர்த்தக வங்கியியலில் தனது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, இலக்கு வைக்கப்பட்ட கடன், நிதி மறுவாழ்வு, ஏற்றுமதி நிதியுதவிக்கான அணுகல் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மூலம் MSME துறையை அபிவிருத்தி செய்வது குறித்த கலந்துரையாடலில் நீலேந்திர பங்களித்தார். 

NDBயின் நீலேந்திர விதானகேMSME வளர்ச்சியில் வங்கியின் பங்கு தொடர்பாக பேசுகையில், NDB இல், MSME துறையினர் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்கின்றனர் என்பதை நாம் அங்கீகரிக்கிறோம். சிறப்பு தீர்வுகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் இது போன்ற பங்குடைமைகள் மூலம், வளர்ந்து வரும் சந்தைகளில் விருத்தி அடைவதற்கு தேவையான அறிவு, நிதி அணுகல் மற்றும் டிஜிட்டல் கருவிகளுடன் சிறிய வர்த்தக உரிமையாளர்களை நாம் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம் என்று குறிப்பிட்டார். 

MSME-களுக்கான வர்த்தகம் - தொழில்முயற்சியாளர்களை இணைத்தல் என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டை மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க ஆரம்பித்து வைத்ததுடன் மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிராந்தியப்பணிப்பாளர் தகாஃபுமி கடோனோ விருதுகளை வழங்கி வைத்ததுடன் விழா நிறைவடைந்தது. இந்த நாளின் முக்கிய சிறப்பம்சமாக வெற்றியாளர்களை ஆதரிக்கும் நிதி நிறுவனங்களுக்கான சிறப்பு அங்கீகாரத்துடன் MSME-களுக்கான சிறந்த 10 வர்த்தகச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் NDBயின் பங்களிப்பானது அதன் அர்ப்பணிப்புள்ள வர்த்தக வங்கியியல் மற்றும் SME வங்கிப் பிரிவுகள் மூலமும் அத்துடன் NEOSBIZ, சிறப்பு கடன் திட்டங்கள் மற்றும் இலக்கு ஆலோசனை திட்டங்கள் போன்ற தளங்கள் மூலமும் MSMEயின் முன்னேற்றத்திற்கான அதன் நீண்டகால உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. நாட்டின் மிக முக்கியமான பொருளாதாரப் பிரிவுகளில் ஒன்றிற்கு முழுமையான, உள்ளடக்கிய வங்கி தீர்வுகளை வழங்க வங்கி தேசிய மற்றும் சர்வதேச பங்காளர்களுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுகிறது. இலங்கைப் பொருளாதாரம் நிலையான மீளெழுச்சி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிச் செல்லும்போது, ​​புத்தாக்கம் , வேலைவாய்ப்பு மற்றும் மீள்தன்மை ஆகியவற்றின் பொறிமுறைகளாக MSMEகளை ஆதரிப்பதில் NDB தொடர்ந்து உறுதியாக உள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05