கிழக்கு
புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக டி.பி.எச். கலனசிறி பதவியேற்பு

Jul 7, 2025 - 12:47 PM -

0

புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக டி.பி.எச். கலனசிறி பதவியேற்பு

அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி இன்று (07) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

 

அனைத்து மதத் தலைவர்களின் ஆசிர்வாதத்தின் கீழ் சுப நேரத்தில் இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

 

அம்பாறை மாவட்டத்தின் முன்னாள்  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய பொலிஸ் அத்தியட்சகர் சனத் அமரசிங்க  கம்பஹா மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பண்டாரவளைப் பிரிவின் பொறுப்பாளராக செயற்பட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி  அம்பாறை மாவட்டத்தின் 31 ஆவது பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் அம்பாறை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட அம்பாறை மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05