வணிகம்
கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings in the Sky 2025 இல் இணையும் Cinnamon Life

Jul 7, 2025 - 03:32 PM -

0

கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings in the Sky 2025 இல் இணையும் Cinnamon Life

ஜூலை 11 முதல் 13 வரை கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள “The Wedding Show 2025” கண்காட்சியில் Cinnamon Life பங்கேற்கவுள்ளது. Weddings in the Sky என்ற கருப்பொருளுடன் அமைந்துள்ள கண்காட்சிக் கூடத்திற்கு விஜயம் செய்து இளைஞர், யுவதிகளுக்கு தங்களது கனவு திருமணத்தை விரும்பியபடி திட்டமிட வாய்ப்பு கிடைக்கும். 

உங்கள் கனவு திருமண தருணத்திற்கான அனைத்து தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் B அரங்கில் உள்ள B37 மற்றும் B38 அரங்குகள் மூலம் எளிதாகப் பெறும் வாய்ப்பை Cinnamon Life உங்களுக்கு வழங்கியுள்ளது. 

இந்தக் கண்காட்சியின் இதயமாகத் திகழ்வது “Weddings in the Sky”. இது Cumulus என்ற மேகங்களுக்கிடையே மிதப்பது போல் தோன்றும் cantilevered நடன அரங்கின் கட்டிடக்கலையால் உருவாக்கப்பட்ட ஒரு திருமண வர்த்தகநாமம் ஆகும். உள்ளே வசீகரிக்கும் fractals ஒளி அமைப்பு உள்ளது. இந்த நடன அரங்கு வடிவமைப்பு மற்றும் உணர்வுகளின் கலவையாக, ஒளி காதலைப் போல நடனமாடும் இடமாக, ஒவ்வொரு தருணமும் முடிவற்றதாக உணரப்படும் இடமாக அமைந்துள்ளது. 

City of Dreams இல் உள்ள Cinnamon Life எந்த வகையான திருமண விருப்பங்களுக்கும் ஏற்ற இடமாக விளங்குகிறது. நட்சத்திரங்களின் கீழ் நெருக்கமான விழாவாக இருந்தாலும் அல்லது மேன்மையான பெரிய கொண்டாட்டமாக இருந்தாலும், உங்கள் கற்பனையைப் போலவே எல்லையற்ற வாய்ப்புகளை இந்த இடம் வழங்குகிறது. 

Cinnamon Life ஐந்து அற்புதமான ballrooms மற்றும் இரண்டு அழகான வெளிப்புற இடங்களைக் கொண்டுள்ளது. இப்பகுதியின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் நவீன கட்டிடக்கலை கொண்ட இடத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு இடமும் தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. நெருக்கமான சிறிய விழாக்கள் முதல் ஆடம்பரமான பெரிய வரவேற்பு விழாக்கள் வரை அனைத்து வகையான கொண்டாட்டங்களுக்கும் Cinnamon Life இணையற்ற வசதிகளை வழங்குகிறது. 

ஆடம்பரமும் உணர்வுகளும் இணையும் ஒரு புதிய உலகை கண்டறிய Cinnamon Life அழைப்பு விடுக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு தம்பதியரும் மேகங்களுக்கிடையே தங்களின் நிரந்தர காதல் கதையை உருவாக்க முடியும். கண்காட்சியில் உள்ள இந்தக் காட்சிக் கூடத்துக்கு வருகை தரும் பார்வையாளர்கள் சிறப்பு பரிசுகளை வெல்லும் வாய்ப்பையும் பெறுவார்கள், இவை உங்களது “I do” திருமண பயணத்தை இன்னும் மாயாஜாலமாக மாற்றும். 

Cinnamon Life இல் Weddings in the Sky அனுபவம் முழுமையானது. உயரமான Sky Lobby இல் வரவேற்பு ஆரம்பித்து, மேகங்களுக்கு மேலே அமைந்த Event Studio வில் திருமண திட்டமிடல் நடைபெறுகிறது. நீச்சல் குள கரையில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள், சிறப்பு உணவகங்களில் நட்சத்திரங்களிடையே விருந்து, மற்றும் முழுமையான தங்குமிட அனுபவம் ஆகியவை வழங்கப்படுகின்றன. “Drink the Sky” என்ற சிறப்பு வரவேற்பு பானம் முதல் விருது பெற்ற சமையல் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட சிறப்பு உணவு வரை, ஒவ்வொரு அம்சமும் மணமக்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05