Jul 8, 2025 - 12:12 PM -
0
இலங்கையர்களுக்கு களிப்பூட்டும் அம்சங்களின் புதிய யுகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், சிங்கள திரைப் படைப்புகளை வழங்கும் கட்டணம் செலுத்தும் OTT கட்டமைப்பான Roopa Hala உடன் SLT-MOBITEL கைகோர்த்துள்ளது. இந்த கட்டமைப்பின் உரிமையாளராக Evoke Digital Group அவுஸ்திரேலியா திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு களிப்பூட்டும் அம்சங்களை எவ்வாறு பார்வையாளர்கள் கண்டு களிக்கின்றனர் என்பதை மாற்றியமைக்கும் வகையில் இந்த கைகோர்ப்பு அமைந்திருக்கும். அத்துடன், பரந்தளவு திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் மற்றும் பிரத்தியேகமான podcasts போன்றவற்றை ஒரே பகுதியில் வரையறைகளின்றி கண்டு களிக்கும் வாய்ப்பை வழங்கும். மேலும், Roopa Hala கட்டமைப்பினூடாக, இலங்கையின் திரைப்பட தயாரிப்பாளர்கள், பணிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்தவும், தமது இலக்குக்குரிய பார்வையாளர்களை சென்றடையவும் பிரத்தியேகமான வாய்ப்பு வழங்கப்படும்.
400 க்கும் அதிகமான தலைப்புகளில் 1500 மணித்தியாலங்களுக்கு மேலான இரசனையூட்டும் பொருளடக்கங்களுடன், சிங்களம் பேசும் பார்வையாளர்கள் மத்தியில் பரந்தளவு தெரிவுகளை நிவர்த்தி செய்யும் வகையில் Roopa Hala அமைந்துள்ளது. மொபிடெல் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 999 + வரிகள் அடங்கலாக 2025 ஜுன் மாதம் 22ஆம் திகதி வரை வழங்கப்படும். இதனூடாக, சிறந்த பெறுமதி மற்றும் களிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக பல பிரத்தியேகமான உள்ளம்சங்களை Roopa Hala கொண்டுள்ளது. பார்வையாளர்களுக்கு ஸ்மார்ட்ஃபோன்கள், டப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் என ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் ஸ்ட்ரீம் செய்யும் வசதியை வழங்குவதுடன், தமது விரல் நுனிகளில் களிப்பூட்டும் அம்சங்களை அனுபவிக்கும் வசதி கிடைப்பதை உறுதி செய்கிறது. பெரிய திரையில் சினிமாவை கண்டுகளிக்க ஆர்வமுள்ளவர்களுக்காக Roopa Hala இனால் தற்போது ஸ்மார்ட் தொலைக்காட்சி அப்ளிகேஷன் வழங்கப்படுகிறது. இது பாவனையாளர்களுக்கு சிறந்த திரை தர அனுபவத்தை தமது இல்லங்களிலிருந்தே அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
இந்த கட்டமைப்பு அனைத்து உள்ளடக்கத்தையும் பாதுகாக்க டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மை (DRM) பாதுகாப்பைப் பயன்படுத்துகிறது. உள்ளடக்கப் பாதுகாப்பில் அக்கறை கொண்ட பாவனையாளர்களுக்கு மன அமைதியை வழங்கும் Roopa Hala, உள்ளடக்க உரிம ஒப்பந்தங்கள் மற்றும் பிராந்திய சட்டங்களுக்கு இணங்க geo-blocking ஐயும் பயன்படுத்துகிறது. கூடுதலாக, Roopa Hala விளம்பரமில்லா அனுபவத்தை வழங்குகிறது, இது பாவனையளார்களுக்கு தடையின்றி, பிரீமியம்-தரமான, கவனச்சிதறல்கள் இல்லாமல் அனுபவிப்பதை உறுதி செய்கிறது. சிங்கள களிப்பூட்டும் அம்சங்களை மாற்றியமைக்க Roopa Hala எதிர்பார்க்கிறது. 65 க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கையின் களிப்பூட்டும் அம்சங்களை வழங்கும் Roopa Hala, சர்வதேச மட்டத்திலுள்ள சிங்கள சமூகத்தினரை தமக்கு பிடித்த அம்சங்களுடன் இணைக்கிறது. இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள இலங்கையர்களுக்கு சிறந்த டிஜிட்டல் களிப்பூட்டும் தெரிவுகளை இந்த சர்வதேச அறிமுகம் உறுதி செய்கிறது. மேலதிக தகவல்களுக்கு பார்வையிடவும், www.sltmobitel.lk