Jul 8, 2025 - 01:30 PM -
0
NDB வங்கியானது , சர்வதேச கல்விக்கான வழிகளை இலகுவாக்கவும் , இலங்கை மாணவர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை வழங்கவும் ஒரு பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையுடன் இந்தத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள முன்னணி சர்வதேச கல்வி ஆலோசனை நிறுவனமான VXL Education உடன் தனது மூலோபாய பங்குடைமையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
NDB வங்கியானது வெளிநாடுகளில் கல்வி கற்பதற்கான தடையற்ற மற்றும் நிதியியல் ரீதியாக அணுகக்கூடிய வழியுடன் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஆதரவு வழங்குவதை உறுதியளிக்கும் ஒத்துழைப்பொன்றின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கைச்சாத்திடும் நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டது.
NDB சார்பாக, தனிநபர் வங்கி மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்திற்கான சிரேஷ்டதுணைத் தலைவர் திரு. சஞ்சய பெரேரா மற்றும் சில்லறை வங்கியியலுக்கான துணைத் தலைவர் திரு. செயான் ஹமீத் ஆகியோர் கையெழுத்திட்டனர், அதே வேளை VXLEducation இன் முகாமைத்துவப்பணிப்பாளர் திரு. அயோத்யா கொ டகொட மற்றும் பணிப்பாளரும் பிரதம நிதி அதிகாரியுமான திரு. நிஹால் கொடகொட ஆகியோர் இந்த நிகழ்வில் கல்வி ஆலோசனைக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
VXL Education ஆனது விரிவான உலகளாவிய இருப்பு மற்றும் 97% விசா வெற்றி விகிதத்துடன், 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமது சர்வதேச கல்விப் பயணங்களில் பயணிக்க உதவியுள்ளதுடன் பல்கலைக்கழக தெரிவு மற்றும் விசா செயலாக்கம் முதல் கடல்சார் ஆதரவு மற்றும் தங்குமிடம் வரை முழுமையான சேவைகளை வழங்குகிறது. அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, அமெரிக்கா மற்றும் அதற்கு அப்பால் உள்ள இடங்கள் வரை அவர்களின் பங்குடைமைகள் பரவியுள்ளன.
இந்த பங்குடைமையின் மூலம், NDB வங்கியானது VXL Educationஇன் மாணவர் ஆதரவு கட்டமைப்பை நிறைவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிதியியல் தீர்வுகளின் தொகுப்பை வழங்கும். இதில் கல்விக் கடன் சலுகைகள், மாணவர் கோப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு பணம் அனுப்பும் ஆதரவு ஆகியவை உள்ளடங்குவதுடன் வெளிநாட்டுக் கல்விக்குத் தயாராகும் போது குடும்பங்கள் தமக்குத் தேவையான வளங்களை அணுகுவதை உறுதி செய்கிறது. இந்த பங்குடைமை தொடர்பாக கருத்து தெரிவித்த சஞ்சய பெரேரா, “NDB-யில், எமது இளைய தலைமுறையினரின் அபிலாஷைகளை மேம்படுத்துவதில் நாம் உறுதியாக உள்ளோம். VXL Education போன்ற உலகளவில் மதிக்கப்படும் வர்த்தகநாமங்களுடன் பங்குடைமையில் ஈடுபடுவது, வாழ்க்கையை மாற்றும் கல்விப் பயணங்களில் ஈடுபட விரும்பும் மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு எமது ஆதரவை வலுப்படுத்த உதவுகிறது. அவர்களின் எதிர்காலத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நாம் பெருமைப்படுகிறோம்.”
இந்த ஒத்துழைப்பானது நிதி திட்டமிடல், கல்வி, தொழில்முயற்சி அல்லது உலகளாவிய இயக்கம் என முக்கியமான ஒவ்வொரு தருணத்திலும் நம்பகமானபங்குதாரராக இருப்பது என்ற NDB-யின் பரந்த நோக்கத்துடன் இணங்குகிறது. NDB வங்கியானது பொறுப்பான மற்றும் நெகிழ்வான நிதியுதவி மூலம் வெளிநாட்டு கல்வியை ஆதரிப்பதன் மூலம், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் தேசிய வளர்ச்சிக்கு ஒரு ஊக்கியாக தன்னைத் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்கிறது.
NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.