Jul 8, 2025 - 01:34 PM -
0
இலங்கையின் மாசற்ற கிழக்கு கரையோரத்தின் கல்குடா கரையோரத்தில் அமைந்துள்ள Sun Siyam பாசிகுடா, சொகுசான அனுபவங்களை பயணிகளுக்கு வழங்கிய வண்ணமுள்ளது. கரையோர சுற்றுலாத் தளம் என்பதற்கு அப்பால், 34 அறைகளைக் கொண்ட இந்த ஹோட்டல், சிறப்பான அனுபவங்கள், சௌகரியம் மற்றும் அமைதியான வசிப்பிட சூழலை வழங்குகிறது.
Tripadvisor Travellers’ Choice விருதுகளில் உலகின் சிறந்த 10% சொத்துகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் வடிவமைப்பு, உயர் சேவை மற்றும் சிறந்த விருந்தினர் அனுபவம் போன்றவற்றுக்காக உச்ச கௌரவிப்பை ரிசோர்ட் பெற்றுள்ளது. சூடான கரையோர உள்ளகப் பகுதிகள் முதல் பசுமையான பிரத்தியேக தோட்டப்பகுதிகள் வரை ஒவ்வொரு பகுதியும், நன்கு திட்டமிடப்பட்டு இலங்கையின் இயற்கை மற்றும் கலாசார செழுமையை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
Sun Siyam பாசிகுடாவில், தங்கியிருக்கும் இரண்டு நாட்களும் ஒரே மாதிரியானவையாக இருக்காது. விருந்தினர்கள் கடலின் அசைவுகளுக்கேற்ப காலையில் எழுந்து, பனை மரங்களால் சூழப்பட்ட அமைதியான காலை உணவை அனுபவித்து, பின்னர் கடற்கரை யோகா, சமையல் வகுப்புகள், kayaking மற்றும் கட்டுமர படகோட்டம் உள்ளிட்ட அனுபவம் நிறைந்த பயணத்தை பெறலாம். வைன் வகைகளை சுவைப்பதில் ஆர்வமுள்ளவர்கள் பிராந்தியத்தின் சிறந்த வைன் நிலையத்தை அனுபவிக்கலாம். பாரம்பரிய தெரிவுகளுடன், பிரத்தியேகமான சுவைக்கும் அனுபவங்களை வழங்குகிறது. நட்சத்திரங்களின் கீழ் தனிப்பட்ட champagne இராப்போசணத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். நீச்சல் தடாகத்தின் அருகே கடல் உணவு, Latitude பாரம்பரிய இலங்கை உணவு வகைகள், அல்லது நாட்டின் பாரம்பரியத்தைக் கொண்டாடும் தேநீர் அனுபவங்கள் என ஒவ்வொரு திருப்பத்திலும் சமையல் தருணங்கள் பிரகாசிக்கின்றன.
ரிசோர்ட்டுக்கு Travelife Gold சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும். நிலைபேறான தன்மைக்கான அதன் அர்ப்பணிப்புக்காக இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது. சூரிய வலுப் பாவனை முதல் கழிவு உருவாக்கம் குறைப்பு வரை சமூக ஈடுபாடு மற்றும் பவளப் பாறைகள் பாதுகாப்பு போன்ற விடயங்களில் Sun Siyam பாசிகுடா தொடர்ந்தும் அக்கறை செலுத்தி பொறுப்பு வாய்ந்த பிரயாண மற்றும் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு தங்கியிருப்பையும் அதிகளவு வெகுமதியளிக்கும் அனுபவமாக மாற்றியமைக்கும் வகையில், ரிசோர்ட்டினால் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய அனுபவத்தை சகல பயணிகளுக்கும் வழங்குகிறது. கோடைக் கால சலுகையில், இலவசமாக 30 நிமிட ஸ்பா அனுபவம் தலா ஒவ்வொரு விருந்தினருக்கும் வழங்கப்படுவதுடன், அறை மேம்படுத்தலுக்கு 50% கழிவு மற்றும் உணவகங்கள் மற்றும் ஸ்பா சிகிச்சைகளுக்கு 15% விலைக்கழிவும் வழங்கப்படுகிறது. ஜோடிகளுக்கு பொருத்தமான வகையில் Romantic Escape, இல் உணவு மற்றும் ஸ்பா சேவைகளுக்கு 15% விலைக்கழிவு, அறை மேம்படுத்தலுக்கு 50% கழிவு மற்றும் wine cellar இல் champagne இராப்போசணங்களுக்கு 20% விலைக்கழிவும் வழங்கப்படுகிறது. குடும்பங்களுக்கான சலுகையில், 12 வயதுக்குட்பட்ட இரு சிறுவர்களுக்கு இலவசமாக தங்குமிட அனுமதி வழங்கப்படுவதுடன், உணவு மற்றும் பானங்களில் 20% கழிவு மற்றும், ஸ்பா சிகிச்சைகளில் 10% கழிவு மற்றும் early check- in, late check-out ஆகியன அறைகளின் வெற்றிடங்களுக்கமைய வழங்கப்படும். அங்கத்துவ சிறப்புரிமை பெற்ற விருந்தினர்கள் ஏற்கனவே காணப்படும் சகல சலுகைகள் மீதும் மேலதிகமாக 15% விலைக்கழிவை பெறுவார்.
அத்துடன் இலவச ரத்துச் செய்கைகள் மற்றும் தேனிலவு அல்லது ஆண்டுபூர்த்தியை கொண்டாடுவோருக்கு விசேட ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். அதில் விசேட சேவை, கேக் மற்றும் பழக்கூடை போன்றன அடங்கியிருக்கும். இலவசமாக வழங்கப்படும் அறை மேம்படுத்தும் சலுகையை பெற்றுக் கொள்ளுமாறு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஹோட்டல் அழைக்கிறது. அத்துடன் உணவு மற்றும் பானங்களில் 20% விலைக்கழிவு, ஸ்பா சேவைகளில் 10% விலைக்கழிவு மற்றும் early check-in மற்றும் late check-out வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த ஒரு ஓய்வு விடுதியாக இருந்தாலும் சரி, அன்பு நிறைந்த ஒரு பயணமாக இருந்தாலும் சரி, அல்லது கடல்சார் ஒரு குடும்ப சாகசமாக இருந்தாலும் சரி, Sun Siyam பாசிகுடா ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகிறது. அங்கு ஆடம்பரம் அமைதியாக இருக்கும், சூழல் அழகாக இருக்கும், மற்றும் நினைவுகள் பயணத்திற்குப் பிறகும் நீண்ட காலம் நீடிக்கும். முற்பதிவுகளுக்கு அழையுங்கள் 0652055555 அல்லது மேலதிக தகவல்களுக்கு https://www.sunsiyam.com/sun-siyam-pasikudah/ ஐ பார்வையிடுங்கள்.