Jul 9, 2025 - 12:24 PM -
0
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாக கம்பளை கல்வி வலயத்திற்க்கு உட்பட்ட பாடசாலையில் இன்று (09) கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து இருந்தனர்.
கம்பளை - இல்லவத்துறை, ரஹ்மானியா முஸ்லிம் வித்தியாலயம் பாடசாலை அதிபர் ஜே. எம். சஹிர் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மாணவர்களுக்கு தெளிவூட்டல் முகமாக டெங்கு நோயை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் பதாகைகளை ஏந்தி மாணவர்கள் பேரணியாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
--