சினிமா
ஐஸ்வர்யா ராய் குறித்து அபிஷேக் பச்சன் 'பளீர்'

Jul 9, 2025 - 01:31 PM -

0

ஐஸ்வர்யா ராய் குறித்து அபிஷேக் பச்சன் 'பளீர்'

'உலக அழகி' பட்டத்துடன் சினிமாவில் நுழைந்த ஐஸ்வர்யா ராய், தனது நடிப்பால் பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழில் 'இருவர்', 'ஜீன்ஸ்', 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்', 'ராவணன்', 'எந்திரன்', 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

அமிதாப்பச்சன் மகனும், முன்னணி இந்தி நடிகருமான அபிஷேக் பச்சனை 2007 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற 13 வயது பெண் குழந்தை உள்ளது.

 

இதற்கிடையில் ஆராத்யா குறித்து அபிஷேக் பச்சன் பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

 

அவர் தெரிவிக்கும் போது,

 

'என் மகள் எந்த சமூக ஊடகங்களிலும் இல்லை. செல்போனிலும் மூழ்கி கிடப்பதில்லை. அவரது இந்த நிலைக்கு காரணம் என் மனைவி தான். ஆராத்யா தான் என் குடும்ப பெருமை. அவரை சிறப்பாக வளர்த்ததில் என் மனைவியை மட்டுமே பெருமைகள் சேரும்' என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05