Jul 9, 2025 - 06:01 PM -
0
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் படம் உருவாகி வருகிறது. இதுவே அவருடைய கடைசி படமாகும். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார் விஜய்.
.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாபி தியோல், ப்ரியாமணி, நரேன் என பலரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.
வருகிற 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விஜய்யின் கடைசி திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் வெறித்தனமாக காத்துகொண்டு இருக்கிறார்கள்.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து நாள்தோறும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
சினிமாவை விட அரசியலில் மிகவும் கடுமையான விமர்சனங்களை விஜய் எதிர்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் நடந்த கட்சி செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் தளபதி விஜய்தான் என அறிவிக்கப்பட்டது.
வருகிற 2026 ஆம் ஆண்டு தமிழக தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வரும் நிலையில், 2026 இல் விஜய்தான் முதல்வர் என கூறி போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் அப்புக்குட்டி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் யாதும் அறியான். இப்படத்தின் ட்ரைலர் நேற்று (08) வெளிவந்தது. நேரத்தை கான்சப்ட்டாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த ட்ரைலரில் வரும் ஒரு காட்சியில் உள்ள போஸ்டரில் 2026 இல் விஜய் முதலவர் ஆகிவிட்டார் என்று காட்டியுள்ளனர். அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.