Jul 9, 2025 - 06:26 PM -
0
பாகிஸ்தானைச் சேர்ந்த புகழ்பெற்ற நடிகை ஹுமைரா அஸ்கர் அலி (32). கராச்சியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். சமீப காலமாக அவர் வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் இன்று (09) அங்கு சென்றுபார்த்தபோது ஹுமைரா இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ந்தார்.
தகவலறிந்து வந்த பொலிஸார் அவரது உடலை கைப்பற்றி வைத்தியசாலைக்கு அனுப்பினர். உடற்கூராய்வுக்கு பின் இறப்புக்கான காரணம் தெரியவரும். இரு வாரங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் பிரபல நடிகை வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.