சினிமா
பிரபல மலையாள நடிகர் சவுபின் சாஹிர் கைது

Jul 9, 2025 - 06:53 PM -

0

பிரபல மலையாள நடிகர் சவுபின் சாஹிர் கைது

மலையாள திரையுலகில் பிரேமம் படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சவுபின் சாஹிர். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்து பிரபலமானார்.

 

சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கிய இத்திரைப்படத்தை சவுபின் சாஹிர் தயாரித்திருந்தார்.

 

இந்த நிலையில், 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்பட தயாரிப்பில் நடந்த பணமோசடி புகாரில், நடிகர் சவுபின் சாஹிர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர். லாபத்தில் 40 சதவீதம் தருவதாகக் கூறி 7 கோடி ரூபா பெற்று ஏமாற்றியதாக சிராஜ் என்பவர் எர்ணாகுளம் நீதிமன்றில் புகார் அளித்திருந்தார்.

 

இதனை தொடர்ந்து சவுபின் சாஹிர் உட்பட 3 பேர் மீது கேரளா மரடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமின் வழங்கவேண்டும் என எர்ணாக்குளம் கோர்ட்டில் 3 பேரும் மனு அளித்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இவர்கள் மூவருக்கும் முன்ஜாமீன் வழங்கியது.

 

இந்த நிலையில் மரடு பொலிஸ் நிலையத்தில் மூவரும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீன் அடிப்படையில் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05