Jul 10, 2025 - 10:00 AM -
0
நுவரெலியா - ஹட்டன் A7 பிரதான வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 08 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நானுஓயா பொலிஸ் பிரிவிலுள்ள நானுஓயா டெஸ்போட் பகுதியில் இன்று (10) அதிகாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறையிலிருந்து நுவரெலியா ஹோர்டன் சமவெளி தேசிய வனத்தில் அமைந்துள்ள உலக முடிவை பார்வையிட சென்ற வேன் வீதி மாறுப்பட்டதால் ஹட்டன் வீதியில் சென்று நானுஓயா டெஸ்போட்டில் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வேன் 70 அடி பள்ளத்தில் விழுந்து குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக வேன் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து குடை சாய்ந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
--