Jul 10, 2025 - 11:37 AM -
0
தமிழ் சினிமாவை சேர்ந்த விஷால், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ் ஆகியோர் மீது சில வருடங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை கிளப்பியவர் தான் நடிகை ஸ்ரீரெட்டி.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். அதில் ஸ்ரீரெட்டி கூறியிருந்த அனகோண்டா விஷயத்தை அப்படத்தின் க்ளைமேக்ஸில் ஒரு காட்சியாகவே வைத்திருந்தனர்.
தற்போது, நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி ஒன்றில் நடிகர் விஷால் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், 'மார்க் ஆண்டனி படத்தில் நான் சொன்னதை வைத்து சீன் வைத்திருந்தார்கள். அவர் அனைத்தையுமே பப்ளிசிட்டிக்காக செய்வது ஒரு நல்ல விஷயம்.
ஒருவேளை அவருடன் நடிக்க என்னை கூப்பிட்டால் செல்வதற்கு முயற்சி செய்வேன். மார்க் ஆண்டனி படத்தில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தால் அவர் சாகுற நிலைமைக்கு சென்றார்.
தற்போது தன்ஷிகாவுக்கும் அவருக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில், இந்த ஜோடிக்கு எனது வாழ்த்துகள். கணவராக இருப்பது பெரிய டாஸ்க்' என்று தெரிவித்துள்ளார்.