சினிமா
பிரபல நடிகை ஓபன் டாக்

Jul 10, 2025 - 05:01 PM -

0

பிரபல நடிகை ஓபன் டாக்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் படம் உருவாகி வருகிறது. இதுவே அவருடைய கடைசி படமாகும். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார் விஜய்.

 

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாபி தியோல், ப்ரியாமணி, நரேன் என பலரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

 

வருகிற 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விஜய்யின் கடைசி திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் வெறித்தனமாக காத்துகொண்டு இருக்கிறார்கள்.

 

விஜய்யின் முதல் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் பூவே உனக்காக. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சங்கீதா என்பவர் நடித்திருந்தார். இவர் விஜய் குறித்து அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

 

இந்த பேட்டியில் 'விஜய்க்கு கல்யாணம் ஆகும்போது நான் கல்லூரியில் பி.ஏ படிச்சிட்டு இருந்தேன். என்னுடைய பெயர் சங்கீதா, அவருடைய மனைவி பெயரும் சங்கீதா என்பதால், என்னுடைய கல்லூரி பேராசிரியர், உனக்கு கல்யாணம்னு சொல்லவே இல்லம்மா என்று கேட்டார்.

 

அப்போ எனக்கும் கல்யாணம் ஆகல. அது ஒரே காலகட்டம் என்பதால் எல்லாருக்கும் ஒரு சின்ன குழப்பம் இருந்தது. அப்புறம் அவர்கிட்ட அது நான் இல்ல சார் என்று சொன்னேன்' என கூறியுள்ளார். 

Comments
0

MOST READ
01
02
03
04
05