Jul 10, 2025 - 08:36 PM -
0
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணிக்கு 155 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அந்த அணி சார்பில் பர்வேஸ் ஹொசைன் எமோன் அதிகபட்சமாக 39 ஓட்டங்களையும், முகமது நைம் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நுவான் துஷார, தசுன் சானக மற்றும் ஜெஃப்ரி வாண்டர்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
அதன்படி, 155 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாட உள்ளது.

