Jul 11, 2025 - 09:10 AM -
0
இலங்கையின் முன்னணி பெண்கள் சுகாதார தூய்மை வர்த்தக நாமங்களில் ஒன்றான Fems, ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கியதாக 180 பாடசாலைகளில் 180,000இற்கும் மேற்பட்ட மாணவர்களை சென்றடையும் வகையில் நாம் பேசலாம், எனும் விரிவான மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான கல்வித் திட்டத்தை செயற்படுத்தியுள்ளது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் United Communities ஆகியவற்றின் ஒத்துழைப்புடனும் சுகாதார மற்றும் கல்வி அமைச்சுகளின் ஆதரவுடனும் இந்த முயற்சி அமுல்படுத்தப்படுகிறது.
Fems மற்றும் அதன் பங்காளர்களான இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் United Communities இடையேயான அதிகாரபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் 2025 ஜூலை 08 அன்று கைச்சாத்திடப்பட்டது. அன்பும் ஆதரவும் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கும் பணியில் அங்கீகரிக்கப்பட்ட அரசு சார்பற்ற அமைப்பான United Communities Guarantee Ltd மற்றும் மனித கஷ்டங்களை குறைக்கவும் அவர்களை வலுவூட்டி கண்ணியத்தை வளர்ப்பதற்கும் உறுதிபூண்ட மனிதாபிமான அமைப்பான இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றுடனான இந்த புதிய இணைவு, Femsஇன் மாதவிடாய் சுகாதார கல்வி முயற்சிகளின் விரிவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
நாடு தழுவிய திட்டத்தை ஆதரிப்பதற்காக சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுடன் தொடர்புகளை எளிதாக்குவதில் இந்த அமைப்புகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. இலங்கையில் மாதவிடாய் சுகாதாரக் கல்வி, தொடர்ந்து குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது. நாட்டில் மாதவிடாய் உள்ள 4.2 மில்லியன் பெண்களில், 30% ஆனோர் மட்டுமே தொடர்ந்து மாதவிடாய் தூய்மை அணையாடைகளைப் பயன்படுத்துகின்றனர். பாடசாலைகளில் மாதவிடாய் சுகாதார முகாமைத்துவம் குறித்து WaterAid மற்றும் தெற்காசியாவிற்கான யுனிசெஃப் பிராந்திய அலுவலகம் நடத்திய ஆய்வின்படி, இலங்கையில் 60% பெற்றோர்கள் தங்கள் மகள்களை மாதவிடாய் காலத்தில் பாடசாலைக்கு செல்ல அனுமதிப்பதில்லை.
2021 முதல் Fems, பாடசாலைகள், பெருந்தோட்டங்கள், சிறைச்சாலைகள் மற்றும் பணியிடங்களில் மாதவிடாய் சுகாதாரக் கல்வி அமர்வுகளை நடாத்தி 300,000இற்கும் மேற்பட்ட பெண்களைச் சென்றடைந்துள்ளது. இவ் அமர்வுகள் மாதவிடாய் கல்வியில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிவர்த்தி செய்தல், சரியான சுகாதார நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் பாடசாலைக்கு வராமல் இருத்தலை குறைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தின.
Femsஇன் விரிவாக்கப்பட்ட மாதவிடாய் சுகாதார கல்வி முயற்சியில் இந்தப் புதிய கூட்டணி, முக்கிய பங்காளராகச் செயற்படும். Hemas Consumer Brandsஇன் முகாமைத்துவப் பணிப்பாளரான சப்ரினா ஏசுபலி கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் விரிவான மாதவிடாய் சுகாதாரக் கல்வி மற்றும் அது தொடர்பான ஆதரவுக்கான அவசரத் தேவை இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு, தவறான சமூக அபிப்பிராயங்களை தகர்த்து அறிவு மற்றும் வளங்களை வழங்குவதில் Femsஇன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இந்த கூட்டாண்மை வலுப்படுத்துகிறது. இளம் பெண்கள் தங்கள் மாதவிடாய் சுகாதாரத்தை நம்பிக்கையுடனும் கண்ணியத்துடனும் பொறுப்பேற்க உதவும் நீடித்த மாற்றத்தை உருவாக்க நாங்கள் எண்ணியுள்ளோம். இந்த முயற்சி, ஒவ்வொரு இலங்கைப் பெண்ணும் சுதந்திரமாக சவால்களைத் தாண்டி உயர உதவுவதற்கான எங்கள் நோக்கத்தின் உண்மையான பிரதிபலிப்பாகும். என்றார்.
நாம் பேசலாம் திட்டம், மாணவர்களை இலக்காகக் கொண்ட அமர்வுகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் கல்வி தொடர்பான பொருட்கள் மற்றும் redeemable வவுச்சர்கள் வழங்கப்படும். மேலதிகமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் இலவச மாதவிடாய் தூய்மை அணையாடை பொதிகள் மூலம் பயனடைவார்கள். WaterAid மற்றும் யுனிசெஃப் ஆய்வின்படி, தற்போது 37% பெண்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சனையாக, அவர்கள்ஒவ்வொரு மாதமும் ஒன்று முதல் இரண்டு நாட்கள் பாடசாலைக்குச் செல்லத் தவறுவது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மாதவிடாய் காரணமாக இழக்கப்படும் பாடசாலை நாட்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். அனுபவம் வாய்ந்த சுகாதார பராமரிப்பு நிபுணர்களால் நடத்தப்படும் இந்த அமர்வுகள், மாணவர்கள் தங்கள் உடல்களை சரியாகப் புரிந்துகொள்ளவும், துல்லியமான, வயதுக்கு ஏற்ற தகவல்களைப் பெறவும், தகவலறிந்து முடிவுகளை எடுக்கவும், இளம் பெண்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வையும் நீண்டகாலமாகப் பாதித்து வரும் முக்கியமான அறிவு இடைவெளிகளை நிவர்த்தி செய்யவும் உதவும். மாதவிடாய் மற்றும் பெண்களின் ஆரோக்கியம் போன்ற விடயங்கள் தொடர்பாக சுகாதார பராமரிப்பு நிபுணர்களிடம் கேள்விகள் கேட்கவும், விளக்கங்களை பெற்றுக்கொள்ளவும் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதனால் அவர்களின் சந்தேகங்கள் பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலில் தீர்க்கப்படுவது உறுதிசெய்யப்படும்.
இந்தத் திட்டம், இன்றைய இளைஞர்களிடையே புரிதலை வளர்ப்பதுடன் மாதவிடாய் ஆரோக்கியத்தை சுயாதீனமாக நிர்வகிக்கக்கூடிய இலங்கைப் பெண்களின் தலைமுறையை வளர்க்கவும் உதவும் என்று Fems நம்புகிறது. பெண்கள் உச்ச சுதந்திரத்தை அடையவும் சமூகத் தடைகளை தாண்டவும் உதவுவது என்ற Femsஇன் முக்கிய நோக்கத்துடன் இந்த திட்டம் ஒத்துப்போகிறது.
Fems பற்றி:
பெண்கள் மாதவிடாய் சுகாதார நெப்பின்களை வர்த்தக நாமமாக 2004 ஆம் ஆண்டில் Fems ஆரம்பிக்கப்பட்டது. பெண்களுக்கு சுதந்திரமாகவும், சமூகமட்டத்தில் காணப்படும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு வெளியில் வருவதற்கும் கைகொடுப்பதை இலக்காகக் கொண்டு செயலாற்றுகின்றது.
சிக்கனமான, உயர் தரம் வாய்ந்த சுகாதார நெப்பின்களை சகல நிலைகளையும் சேர்ந்த பெண்களுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை வழங்குவதற்கு Fems தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது தயாரிப்பு தெரிவுகளில் Aya தயாரிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. தரத்தில் கவனம் செலுத்துவதுடன், சிக்கனமான தயாரிப்புகளை நாடும் நுகர்வோருக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆழமான புரிந்துணர்வு மற்றும் கரிசனையுடன், அதிகரித்துச் செல்லும் பெண்களுக்கான மாதவிடாய் தூய்மை தேவைகளை நிவர்த்தி செய்வதில் Fems கவனம் செலுத்தி, அவர்களுக்கு சௌகரியமாகவும், நம்பிக்கையுடனும், ஆதரவுடனும் திகழ்வதை உறுதி செய்ய பங்களிப்பு வழங்குகின்றது. இன்று, Fems பெண்களுக்கான மாதவிடாய் கால பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குவதில் நம்பகமான வர்த்தக நாமமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பில் பெண்களுக்கு விழிப்புணர்வூட்டுவதை தனது வர்த்தக நாம நோக்காகக் கொண்டு, மாதவிடாய் தொடர்பில் நிலவும் மூட நம்பிக்கைகளை இல்லாமல் செய்வதிலும் கவனம் செலுத்துகின்றது. பெண்களின் ஆற்றலில் நம்பிக்கை கொண்டு, அவர்களின் பயணத்துக்கு ஆதரவளித்து, அவர்களின் வலிமையை கொண்டாடும் நாமமாகவும், வலுவூட்டலின் அடையாளமாகவும் Fems திகழ்கின்றது.
மேலதிக தகவல்களுக்கு, பார்வையிடவும் https://hemas.com/brands/fems.html.