உலகம்
கடும் நிதி நெருக்கடி : விற்பனைக்கு வரும் பாகிஸ்தான் எயார்லைன்ஸ்

Jul 11, 2025 - 11:38 AM -

0

கடும் நிதி நெருக்கடி : விற்பனைக்கு வரும் பாகிஸ்தான் எயார்லைன்ஸ்

பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு சொந்தமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் கடுமையான நிதி சிக்கலில் தவித்து வருகிறது. 

கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 7,000 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலையில், இந்த சம்பவம் வௌிச்சத்திற்கு வந்தது. இதற்கிடையே, பாகிஸ்தான் எயார்லைன்ஸை கடந்த வருடம் விற்பனை செய்ய நடந்த முயற்சி வெற்றிபெறவில்லை. 

இந்நிலையில், அந்நிறுவனத்தை விற்கும் முயற்சியை பாகிஸ்தான் அரசாங்கம் தீவிரப்படுத்தி உள்ளது. விலைக்கு வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்க 4 உள்நாட்டு நிறுவனங்கள் தகுதி பெற்றிருப்பதாக அந்நாட்டு தனியார்மயமாக்கல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஒக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில், ஏலம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05