செய்திகள்
டிரம்பின் தீர்வை வரியால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கம்!

Jul 11, 2025 - 01:37 PM -

0

டிரம்பின் தீர்வை வரியால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கம்!

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான பரஸ்பர தீர்வை வரியை 30 சதவீதமாகக் குறைக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முடிவு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. 

இரு நாடுகளுக்கும் இடையே 88 சதவீத வர்த்தக பற்றாக்குறை காரணமாக இலங்கை மீது 44 சதவீத வரியை விதிப்பதாக கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி ஜனாதிபதி டிரம்ப் முதலில் அறிவித்த போதிலும், நேற்று இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில் ஜனாதிபதி டிரம்ப் அந்த எண்ணிக்கையை 30 சதவீதமாகக் குறைத்தார். 

இந்த கட்டண விகிதத்தை மேலும் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக நேற்று விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் தெரிவித்தனர். 

இருப்பினும், அமெரிக்காவால் புதிதாக விதிக்கப்பட்ட 30 சதவீத பரஸ்பர வரிக்கு கூடுதலாக, தற்போதுள்ள 10 சதவீத வரியும் சேர்க்கப்பட உள்ளது. 

அதன்படி, இலங்கை மீது அமெரிக்கா விதித்த 40% வரி நாட்டின் ஏற்றுமதித் துறையில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும்? 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை விரிவுரையாளர் உமேஷ் மொரமுதலி இது குறித்து கூறுகையில், 

"ஆடைகளைப் பொறுத்தவரை, நாங்கள் வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுடன் போட்டியிடுகிறோம். 

இந்த நாடுகளில் ஊதிய நிலை இலங்கையின் விலைகளை விடக் குறைவாக உள்ளது. சில நேரங்களில், நமது விலை உயர்வை பங்களாதேஷ் உடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருளை விட விலைக் குறைப்பின் சதவீதம் மிக அதிகமாக இருக்கும். 

இதனால்தான் இலங்கை தான் ஏற்றுமதி செய்யும் பொருட்களை பல்வகைப்படுத்த வேண்டும். ஏற்றுமதி செய்யும் நாடுகளையும் பல்வகைப்படுத்த வேண்டும்." என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05