Jul 11, 2025 - 04:28 PM -
0
டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வே அணிக்கெதிராக தென்னாபிரிக்கா அணி தலைவராக செயல்பட்ட வியான் முல்டர் 367 ஓட்டங்களை எடுத்திருக்கும்போது, முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்திருந்தார். இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அவர் நினைத்திருந்தால் எளிதாக 400 ஓட்டங்களை கடந்து லாராவின் சாதனையை முறியடித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
இது தொடர்பாக முல்டர் கூறுகையில் "பிரையன் லாரா ஒரு லெஜண்ட், அந்த அந்தஸ்துள்ள ஒருவர் அந்த சாதனையை தக்க வைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
எனக்கு மீண்டும் அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்தால், நான் இப்போது செய்ததைதான் அப்போதும் செய்வேன். நான் டிக்ளேர் செய்வது குறித்து பயிற்சியாளரிடமும் பேசினேன். சில சாதனைகள் லெஜண்டுகளுடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட லெஜண்டுகளில் ஒருவர் லாரா அவர் தெரிவித்தார்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் "லாரா தன்னிடம் பேசினார். அப்போது 400-ஐ நோக்கி சென்றிருக்க வேண்டும். சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்று அவர் கூறினார். எனக்கு மீண்டும் வாய்ப்பு வந்தால், அவருடைய ஸ்கோரை விட அதிக ஸ்கோர் அடிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்" என முல்டர் தெரிவித்துள்ளார்.