செய்திகள்
பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் மேலும் 04 நியமனங்களுக்கு அனுமதி

Jul 11, 2025 - 04:30 PM -

0

பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் மேலும் 04 நியமனங்களுக்கு அனுமதி

நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் (09) அனுமதி வழங்கியது. 

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது. 

அதற்கமைய, வலுசக்தி அமைச்சின் செயலாளராக பேராசிரியர் கே.ரீ.எம். உதயங்க ஹேமபாலவின் நியமனம், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளராக கே.எம்.ஜி.எஸ்.என். களுவெவவின் நியமனம், தொழில் அமைச்சின் செயலாளராக எஸ்.எம். பியதிஸ்ஸவின் நியமனம் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளராக கே.டீ.ஆர். ஒல்காவின் நியமனம் ஆகிய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

Comments
0

MOST READ
01
02
03
04
05