Header Logo
Mogo Academy

வணிகம்
அமெரிக்காவின் புதிய தீர்வை வரி அறிவிப்பு பற்றிய JAAF அறிக்கை - ஜூலை 2025

Jul 11, 2025 - 04:43 PM -

0

அமெரிக்காவின் புதிய தீர்வை வரி அறிவிப்பு பற்றிய JAAF அறிக்கை - ஜூலை 2025
Mobitel inner

ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரவுள்ள அமெரிக்காவின் 30% பரஸ்பர தீர்வை வரி அறிவிப்பானது இலங்கையின் ஆடைத் தொழில்துறையில் கணிசமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாய் ஈட்டுபவர்களில் ஒன்றான இத்துறை அமெரிக்க சந்தையை பெரிதும் நம்பியுள்ளது. மேலும், இந்த வரி உயர்வு பிராந்திய போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இலங்கையின் போட்டித்திறனை கடுமையாக பாதிக்கக்கூடும். 

JAAF அறிக்கையின்படி, வியட்நாம் ஏற்கனவே ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து தற்போது 20% தீர்வை வரிக்கு உட்பட்டுள்ளது. பங்காளதேஷ் 35% வரி விதிப்பை எதிர்கொண்டாலும், அமெரிக்காவுடன் வரிக்குறைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிட்டது. இந்தியாவின் நிலைப்பாடு இன்னும் பேச்சுவர்ர்த்தைகளை நடத்தி வருகிறது. எனினும் ஆரம்பகட்ட தகவல்கள் இலங்கையை விட சாதகமான வரி விகிதம் கிடைக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. இலங்கையை விட சற்று அதிகமான வரி விகிதம் கொண்ட கம்போடியாவும் வரிக்குறைப்புக்கான பேச்சுவார்த்தைகளை நடத்த வாய்ப்புள்ளது. 

“30% வரி தொடர்ந்தால், அமெரிக்க வாங்குபவர்கள் குறைந்த வரிவிகிதம் கொண்ட நாடுகளுக்கு மாறிவிடுவார்கள்” என JAAF எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, இலங்கைக்கு சாதகமான ஒப்பந்தம் கிடைப்பதை உறுதி செய்ய, அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் (USTR) தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கத்தை JAAF வலியுறுத்துகிறது. 

44% இலிருந்து 30% ஆக வரி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது, இலங்கை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) இடையேயான கலந்துரையாடல்கள் நேர்மையான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதை அங்கீகரிக்கும் ஒரு அறிகுறியாகும். 2025 ஆகஸ்ட் முதலாம் திகதி காலக்கெடுவுக்கு முன் USTR உடன் பேச்சுவார்த்தைகள் மிக விரைவில் தொடரும் என அரசாங்கம் தெரிவித்ததில் JAAF மகிழ்ச்சியடைந்துள்ளது. 

வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும், சந்தைப் பங்கை நிலைநிறுத்தவும், உலக ஆடை விநியோக சங்கிலிகளில் இலங்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் இராஜதந்திர தீர்வு அத்தியாவசியமானது என JAAF மேலும் வலியுறுத்தியது.


MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara