Jul 11, 2025 - 05:17 PM -
0
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குழல்மந்தம் நொச்சுள்ளி பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 40), நகைக்கடை ஊழியர். இவருடைய மனைவி சித்ரா. இவர் குழல்மந்தம் மகாத்மா காந்தி சர்வீஸ் கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இதற்கிடையே சித்ராவுக்கும், சங்க தலைவரான விஜீஸ் சஹதேவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் நெருங்கி பழகியதாக தெரிகிறது. இது மனோஜ்குமாருக்கு தெரிய வரவே, தனது மனைவியை கண்டித்து உள்ளார். இருப்பினும் மனைவி விஜீஸ் சஹதேவனுடன் தொடர்ந்து பழகினார்.
இதனால் மனவேதனை அடைந்த மனோஜ்குமார் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் அவர் மீட்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். மனோஜ்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக குழல்மந்தம் பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினர் முறைப்பாடு அளித்தனர்.
விவாகரத்து கோர சித்ரா, விஜீஸ் சஹதேவனுடன் சேர்ந்து மனோஜ்குமாரிடம் பணம் கேட்டும், மிரட்டியும் வந்ததாக குற்றம்சாட்டினர். இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, மனோஜ்குமார் எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.