செய்திகள்
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய சீன தூதுவர்

Jul 11, 2025 - 06:40 PM -

0

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய சீன தூதுவர்

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, மல்வான பகுதியல் அமைந்துள்ள யடிஹேன கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை நன்கொடையாக வழங்கினார். 

அத்தோடு, இன்று (11) பாடசாலை வளாகத்தில் மாணவர்களின் பெற்றோருக்கு உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் பங்கேற்ற இலங்கைக்கான சீனத் தூதுவர், கடினமான சூழ்நிலைகளிலும் கல்வி தொடரப்பட வேண்டும் என்றும், நாம் எவ்வளவு ஏழைகளாக இருந்தாலும், பிள்ளைகளின் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

மாணவர்களே நாட்டின் எதிர்காலமும் நம்பிக்கையும் என்றும், அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்க நாம் பாடுபட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். 

இந்த நிகழ்வில் தூதுவரின் மனைவி Jin Enz மற்றும் செயலாளர்கள் இருவர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் உள்ளிட்ட ஆசியரியர் குழுவினர், உலர் உணவைப் பெற வந்த பெற்றோர்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை பெறுவதற்காக வருகைதந்த பாடசாலை மாணவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05