இந்தியா
பிறந்த குழந்தையை 50,000 ரூபாவுக்கு விற்பனை செய்த தாய்

Jul 11, 2025 - 09:04 PM -

0

பிறந்த குழந்தையை 50,000 ரூபாவுக்கு விற்பனை செய்த தாய்

இந்தியாவின் அசாம் மாநிலம் சிவசாகர் சிவில் வைத்தியசாலையில் கடந்த மாதம் 22 வயதான இளம்பெண்ணிற்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாகவில்லை. தகாத உறவில் குழந்தை பிறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இதனால் அந்த குழந்தையை இளம்பெண்ணும் அவரின் தாயாரும் விற்க முயன்றுள்ளனர். குழந்தை விற்கப்போகும் தகவல் குழந்தைகள் நலக்குழு வைத்தியசாலைக்கு தெரியவந்தது. 

இதையடுத்து குழந்தையை விற்க வேண்டாமென அந்த இளம்பெண்ணிற்கும், அவரது தாயாருக்கும் அறிவுரை வழங்கினர். அவர்களின் அறிவுறுத்தலையும் மீறி வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்புவதற்கு முன்பே அவர்கள் குழந்தையை 50,000 ரூபாவுக்கு விற்பனை செய்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பொலிஸார் குழந்தையை விற்ற இளம்பெண், அவரது தாயார் மற்றும் அவர்களுக்கு உதவிய பெண் ஆஷா பணியாளர் ஒருவர் என 3 பேரை கைது செய்தனர். 

குழந்தையை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05