உலகம்
நாங்களும் 50 வீதம் வரி விதிப்போம் - அமெரிக்காவிற்கு பிரேசில் பதிலடி

Jul 11, 2025 - 10:12 PM -

0

நாங்களும் 50 வீதம் வரி விதிப்போம் - அமெரிக்காவிற்கு பிரேசில் பதிலடி

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பிரேசிலுக்கு அதிக பட்சமாக 50 சதவீதம் வரி விதித்து அதிரடி காட்டி உள்ளார். இது வர்த்தக போரை மேலும் அதிகரித்து இருக்கிறது. இதற்கு நாங்களும் 50 சதவீதம் வரி விதிப்போம் என்று பிரேசில் பதிலடி கொடுத்துள்ளது. 

இது தொடர்பாக அந்நாட்டு ஜனாதிபதி லூயிஸ் இன்சியோலுலா டா சில்வா கூறுகையில், முதலில் கலந்துரையாடலை நடத்த முயற்சி செய்வோம். கலந்துரையாடல் இல்லை என்றால் பரஸ்பர சட்டம் நடைமுறைக்கு வரும். அவர்கள் எங்களிடம் 50 சதவீதம் வசூலிக்க போகிறார்கள் என்றால் நாங்கள் அமெரிக்காவிடம் 50 சதவீதம் வரி வசூலிப்போம் என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05