Jul 11, 2025 - 11:00 PM -
0
நோர்வூட் பிரதேசசபை இனி வரும் காலங்களில் மக்கள் சபையாக இயங்கும் எனவும், மக்களால் தெரிவு செய்து அனுப்பிவைக்கப்பட்ட உறுப்பினர்கள் அவர்களது வட்டார மக்கள் சந்திப்பை நாடத்துவதற்கு நோர்வூட் பிரதேசசபை வளாகத்தில் காரியாலயம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுப்பதாக நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் பிரான்ஸ் ஹெலன் தெரிவித்தார்.
நோர்வூட் பிரதேசசபையின் முதலாவது அமர்வில் ஆற்றிய விசேட உரையின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
முதலாவது அமர்வு தவிசாளர் பிரான்சிஸ் ஹெலன் தலைமையில் 11-06-2025 இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.
நோர்வூட் பிரதேசசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உபதவிசாளர் சிவகுமார் உட்பட 18 பேர் கலந்து கொண்டதுடன் இ.தொ.கா உறுப்பினர்கள் இருவர் சமூகமளிக்கவில்லை
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இன்று முதல் நோர்வூட் பிரதேசசபை நடவடிக்கைகள் சுற்று நிரூபத்திற்கமைய நடைபெறும் அதே போல எமது எல்லை பிரதேசத்தில் கல்வி ஊக்குவிப்பு, சுகாதாரம், பாதுகாப்பு, அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் .
தவிசாளராக கடமையேற்றுள்ள எனக்கு உறுப்பினர்களாகிய நீங்களே வழிகட்டியாகவும் ஆலோசனை வழங்குபவர்களாக இருக்க வேண்டும். தேர்தல் அரசியல் செயற்பாட்டின் போது பல கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் அதனை மறந்து அனைவரும் ஒன்றினைந்து சமூக நலன் சார் மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை முன்னெடுப்போம்.
நோர்வூட் பிரதேசசபைக்கு போதுமான வளங்கள் காணப்படுகிறது. அதனை ஏற்படுத்திய நோர்வூட் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் செயலாளர் முரளீதரன் மற்றும் முன்னாள் நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நோர்வூட் பிரதேசசபை கட்டடத்தில் தவிசாளர், உப தவிசாளர் ஆகியோருக்கான காரியாலயம் இருக்கின்றது. எனினும் மக்களால் தெரிவு செய்ப்பட்ட உறுப்பினர்களும் மக்கள் சந்திப்பினை செய்ய வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கான காரியலயம் ஒன்றினை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன். அதற்கான அதரவினை உங்களிடமிருந்து எதிர்பார்ப்பதோடு தொடர்ந்து எமது மக்கள் பணியை ஒன்றிணைந்து மேற்கொள்வோம் எனவும் கோட்டுக்கொண்டார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினராகி இன்று சபைத் தவிசளராக இந்த ஆசனத்தில் அமவர்தற்கு வழி செய்த அரசாங்கத்தின் நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், நோர்வூட் தொகுதி அமைப்பாளர், எனக்கு வாக்களித்த மக்கள் மற்றும் எனக்கு வாக்களித்து தவிசாளராக தெரிவு செய்த உறுப்பினர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
--

