Header Logo
Mogo Academy

விளையாட்டு
கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா

Jul 12, 2025 - 06:56 AM -

0

கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா
Mobitel inner

இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 3ஆவது போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவரில் 387 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஜோ ரூட் 104 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். ஜேமி ஸ்மித், கார்ஸ் அரை சதம் கடந்தனர். 

இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர். 

இந்நிலையில், இந்த போட்டியில் கைப்பற்றிய 5 விக்கெட்டையும் சேர்த்து ஜஸ்பிரித் பும்ரா இதுவரை வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் 13 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். 

முன்னதாக கபில் தேவ் 12 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது கபில் தேவின் அந்த வாழ்நாள் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். 

ஜஸ்பிரித் பும்ரா - 13 முறை 5 விக்கெட்டுக்கள்

கபில் தேவ் - 12 முறை 5 விக்கெட்டுக்கள்

அனில் கும்ப்ளே - 10 முறை 5 விக்கெட்டுக்கள்


MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara