Jul 12, 2025 - 08:14 AM -
0
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 6 வீரரான செர்பியாவின் ஜோகோவிச் உடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் 6-3, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னர், அல்காரசை சந்திக்கிறார்.