Jul 12, 2025 - 10:43 AM -
0
T20 கிரிக்கெட் அறிமுகத்திற்கு பிறகு உலகம் முழுவதும் கிரிக்கெட் பிரபலமாகி வருகிறது. 3 மணி நேரத்தில் போட்டி விறுவிறுப்பாக முடிவடைந்து விடும் என்பதால் பல ஐரோப்பிய நாடுகள் கிரிக்கெட் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்த சூழலில் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லாக எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இத்தாலி முதல் முறையாக தகுதி பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கிரிக்கெட் பக்கம் திரும்பாத இத்தாலி தகுதி பெற்றுள்ளது.
T20 உலகக்கிண்ண தொடர்கான ஐரோப்பிய பிராந்திய தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் இத்தாலியும், நெதர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் இத்தாலி நிர்ணயித்த 135 ஓட்டங்கள் என்று இலக்கை நெதர்லாந்து அணி 16.2 வது ஓவரில் எட்டியது. இதன் மூலம் நெதர்லாந்து அணி T20 உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்றிருக்கிறது.
புள்ளி பட்டியலில் ஸ்கொட்லாந்து அணியுடன் அதிக ஓட்ட விகிதத்தை பெற்றிருந்த இத்தாலி அணி தற்போது இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இதன் மூலம் கடந்த நான்கு T20 உலகக்கிண்ண தொடரில் இடம்பெற்றுள்ள ஸ்கொட்லாந்து அணி தற்போது T20 உலகக்கிண்ண தொடரில் தகுதி பெறாமல் வெளியேறியிருக்கிறது.
மொத்தம் 20 அணிகள் T20 உலகக்கிண்ண 2026 ஆம் ஆண்டு தொடரில் விளையாடுகிறது. தற்போது வரை 15 அணிகள் தகுதி பெற்றிருக்கிறது. இன்னும் ஈஸ்ட் ஆசிய பஸ்பிக் தகுதிச்சுற்று தொடரிலிருந்து மூன்று அணிகளும், ஆப்பிரிக்கா தகுதிச்சுற்று மூலம் இரண்டு அணிகளும் உலகக்கிண்ண தொடருக்கு பகுதி பெறும்.
இந்த சூழலில் முன்னாள் அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜோ பெர்ன்ஸ் தற்போது இத்தாலி அணியின் தலைவராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.