உலகம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 200 அகதிகள் கைது

Jul 12, 2025 - 01:50 PM -

0

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 200 அகதிகள் கைது

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் அகதிகளை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில், அந்நாட்டின் கலிபோர்னியா மாகாணம் கமெரிலா, கார்பெண்டிரா பகுதிகளில் உள்ள பண்ணைகளில் சட்டவிரோத அகதிகள் தங்கி இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் அடிப்படையில் 2 பகுதிகளிலும் பொலிஸார் சோதனை நடத்தினர். சோதனையில் 2 பண்ணைகளிலும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 200 பேரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மெக்சிகோ போன்ற நாட்டை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Comments
0

MOST READ